2021 மே 15, சனிக்கிழமை

கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

Sudharshini   / 2015 நவம்பர் 26 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுரங்க ரஜநாயக்க

போலி அனுமதிப்பத்திரத்துடன் 6ஆயிரம் கிலோ கிராம் கழிவுத் தேயிலையை கொண்டுச் சென்ற நபரை, கம்பளை விசேட அதிரடிப்படையினர் இன்று (26) கைதுசெய்துள்ளதுடன்  கழிவுத் தேயிலைத்தூளுடன் லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி, பன்விலவிலிருந்து அட்டபாகை நோக்கி பயணித்த லொறியை, நுவரெலியா-அட்டபாகை வீதியில்  வைத்து வழிமறித்த விசேட அதிரடிப்படையினர்,   குறித்த லொறியை சோதனைக்குட்படுத்திய போதே அதில் கழிவுத் தேயிலை கொண்டுச் செல்லப்பட்டமை  தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக மேற்படி நபர், கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .