2021 மே 10, திங்கட்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்கக்கோரி, ஹட்டன் பஸ் நிலையத்துக்கு  முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (27) நடைபெற்றதுடன் கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.

கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனமும் நுவரெலியா மாவட்ட தோட்டக் கிராமிய தலைவர்கள் ஒன்றியமும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது 5,000க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து கையொப்பம் பெறப்பட்டதுடன்   சம்பளப் பேச்சுவார்த்தை தொடர்பான மகஜரொன்றும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தொழில் அமைச்சர்களுக்கும் அனுப்பப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட தோட்ட கிராமியத்தின் தலைவர் டி.விஜேந்திரன் தெரிவித்தார்.

கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சம்பளப் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரி பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X