2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

கொக்ஹெய்ன் கொண்டுவந்த நோர்வூட் இளைஞர்கள் கைது

George   / 2016 ஜூலை 17 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

கொக்ஹெய்ன் போதைப்பொருள் வைத்திருந்த இருவரை நோர்வூட் ரொக்கில் பிரதேசத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 35 இலட்சம் பெறுமதியான 300கிராம் கொக்ஹெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் நோர்வூட் ரொக்கில் மற்றும் மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

கொட்டாவ பகுதியில் தலைக்கவசம் விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளரிடம் உதவியாளராக இருந்த இருவரே அவர்களது வீட்டில் வைத்து இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடையின் உரிமையாளர், தம்மிடம் கொக்ஹெய்ன்; போதைபொருளை கொடுத்து விற்பனை செய்து தருமாறு கூறியாக கைதுசெய்யப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இரகசிய தகவலையடுத்து குறித்த இளைஞர்களை நீண்ட நாட்களாக அவதானித்து வந்த களுத்துறை பொலிஸார், சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும் குறித்த இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .