Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ்
கூட்டொப்பந்தத்தை நீக்கக்கோரும் போராட்டத்தில், அனைத்து சமூக அமைப்புகளும் பங்கெடுக்க வேண்டுமென்று கோரியுள்ள மலையக சமூக நீதிக்கான அமைப்பு, இதற்கு ஆதரவளிக்கும் அனைவரையும் கையெழுத்திடுமாறும் கோரியுள்ளது.
இதுதொடர்பில், அவ்வமைப்பின் அமைப்பாளர் எஸ்.மகேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பில் 18.10.2016அன்று , கொழும்பில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கையை, நாங்கள் எதிர்க்கின்றோம்.
தோட்டத் தொழிலாளர்களை பகடைக்காய்களாக்கி, அவர்களது உழைப்பைச் சூறையாடி வாழும் வகையில் முத்தரப்பினரும் செய்துகொண்ட ஒப்பந்தம், தொழிலாளர்களுக்குப் பாதகமாகவே அமைந்துள்ளது. இந்த கூட்டொப்பந்தத்துக்கு எதிராக, அனைத்துப் பொது அமைப்புகளும் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், மலையக சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, கூட்டொப்பந்தத்தை நீக்கக்கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது. அதற்காக, 1 இலட்சம் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது.
மாத்தளையில் கடந்த 19.11.2016 அன்று, ஆரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை, முழு மலையக பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இரண்டாம்கட்டம், இராகலை சென் லெனாட்ஸ் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அடுத்தக்கட்டமாக, நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் நடத்தப்படவுள்ளது. அதேவேளையில், கந்தப்பொல ஹய்பொரஸ்ட் தோட்டத்தின் மூன்று பிரிவுகளிலும் கையெழுத்துக்கள் திரட்டப்படவுள்ளன.
இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கையில், அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் கலந்துகொள்வதுடன் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் கலந்துகொண்டு ஆதரவை நல்க அழைப்பு விடுக்கின்றேன்” என்று அவர் கூறினார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
17 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
17 Oct 2025