2021 மே 18, செவ்வாய்க்கிழமை

காட்டு யானைகளின் தாக்குதலில் 17 பேர் பலி

Kogilavani   / 2016 ஜூலை 28 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

2015 ஆம் ஆண்டு ஊவா மாகாணத்தின் பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் காட்டு யானைகளின் தாக்குதலுக்குள்ளாகி, 17 பேர் உயிரிழந்தள்ளதாக  ஊவா மாகாண சபையின் உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதிமாலியத்த, கந்தகெட்டிய, மீகாகியுல, லுணுகலை மற்றும் மொனராகலை மாவட்டத்தின் வெள்ளவாய, மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.  தொடர்ந்துரைத்த அவர்,

'வெள்ளவாய பகுதியில் நேற்றுப் புதன்கிழமை காலை,  தனது பாட்டனாருடன் பாடசாலைக்குச் சென்ற 9 வயது சிறுமி, காட்டு யானை தாக்குதலில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கெதிராக, வன விலங்கு திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இச்செயற்பாடானது, பெரும் கவலைக்குரிய விடயமாகும்.

அத்துடன், வீடுகள், வாகனங்கள், உடமைகள் என்பனவும் யானை தாக்குதலினால் சேதமடைவதுடன் விவசாயப் பயிர்களும் பெருமளவு நாசமாகியுள்ளன' என்று அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .