2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் - போக்குவரத்து தடை

Sudharshini   / 2016 மே 27 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

ஹட்டன், கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீதியூடான போக்குவரத்து நேற்று வியாழக்கிழமை (26) முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதெனவும் கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கினிகத்தேனை பொலிஸாரினால் கட்டட ஆராய்ச்சி திணைக்களத்துக்கு அறிவித்ததையடுத்து, வெடிப்பு ஏற்பட்ட இடத்தை   வியாழக்கிழமை பார்வையிட்ட அதிகாரிகள் குறித்த வீதியினை பயன்படுத்துவதை தடைசெய்யமாறு உத்தரவிட்டுள்ளனர்.

வீதியில் ஏற்பட்டுள்ள வெடிப்பு அனர்த்ததிற்குள்ளாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மேலதிக நில ஆய்வு சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர்.

மேலும், இப்பகுதியில் உள்ள சில கடைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .