Princiya Dixci / 2016 மார்ச் 17 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பசறைப் பகுதிக் கிராமிய வங்கிகளில் மீளப் பெறப்படாமல், காலம் கடந்த நிலையில் அடகு வைக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளை, தற்போதைய விலை நிர்ணயத்துக்கமைவாக, சலுகையடிப்படையில் பசறைப் பகுதியிலுள்ள பெண்களுக்கு விற்பனை செய்யுமாறு, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக, பசறைக் கிராமிய வங்கியின் பணிப்பாளர் சபையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பசறைப் பகுதியின் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் நிருவகிக்கப்படும் பசறைப் பகுதி கிராமிய வங்கிகளில், இரண்டரைக்கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதிமிக்க தங்க நகைகள் பல வருடங்களுக்கு முன் அடகு வைக்கப்பட்டு, மீளப்பெறாமலுள்ளன.
அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள் மீளப் பெறும் பொருட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு, கிராமிய வங்கிகள் மூலமாக பலமுறை அறிவிக்கப்பட்டபோதும் நகைகள் மீளப்பெறப்படவில்லை.
இது தொடர்பில், வங்கிப் பணிப்பாளர்கள் மாகாண முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இதற்கமைய, இது குறித்து, பசறை - பெல்காதன்னை முகாமைத்துவ பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற கூட்டத்தில், பசறைப் பகுதி கிராமிய வங்கிப் பணிப்பாளர் சபையினரிடம், மாகாண முதலமைச்சர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த உத்தரவையடுத்து, பசறைப் பகுதியின் கிராமிய வங்கிப் பணிப்பாளர் சபை, மீளப் பெறப்படாமல், காலம் கடந்த நிலையில் இருக்கும் தங்க நகைகளை விற்பனை செய்யும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
33 minute ago
57 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
57 minute ago
2 hours ago
3 hours ago