Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்யாத காளான் செய்கையாளர்களை விவசாயத்திணைக்களத்தில் பதிவு செய்யுமாறு யாழ்;பாண மாவட்ட விவசாயத் திணைக்கள பணிப்பாளர் ஸ்ரீபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருத்துவ குணம் கொண்ட காளான் உணவுப் பாவனை யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது. கிருமிநாசினி பாவனை மற்றும் செயற்கை உரப் பசளைப் பாவனை இன்றி காளான் இயற்கையாக வளர்ந்து வருவது. அத்துடன் குறைந்த முதலீட்டுடன் கூடிய வருமானத்தைப் பெறக்கூடியது.
யாழ். மாவட்டத்தில்; ஒரு கிலோ காளான், 300 ரூபாவிலிருந்து 500 ரூபாய் வரை விற்பனையாகின்றது. இந்த வகையில் மாணவர்களும் பகுதி நேர தொழிலாக காளான் செய்கையை மேற்கொண்டு கணிசமான வருமானத்தை பெற்றுக் கொள்ளமுடியும்.
காளான் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மேலதிகமான உதவிகள் பயிற்சிகள் சந்தைப்படுத்தல் தொடர்பான வாய்ப்புக்கள் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு திணைக்கள ரீதியாக தகவல்கள் திரட்டப்படுகின்றன.
இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத காளான் செய்கையாளர்கள் தமது விபரங்களை அலுவலக நேரத்தில் பதிவு செய்து கொள்ளலாமெனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago