மு.இராமச்சந்திரன் / 2017 ஜூலை 23 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}







மு.இராமச்சந்திரன்
மாலபேயியுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, இலங்கையில் நடைமுறையிலுள்ள இலவசக் கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் சீர்குழைத்து வருவதாக, சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயத்தினர் தெரிவித்துள்ளனர்.
சைட்டத்தை மூடக்கோரி, ஹட்டன் பஸ்தரிப்பிடத்துக்கு முன்பாக, நேற்று (23) முன்னெடுத்த விழிப்புணர்வு துண்டுபிரசுர விநியோகத்தின்போதே, அவர்கள் இவ்வாறு கூறினர்.
இதன்போது கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள்,
“மலையக பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளில், ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. அதேநேரம், நாட்டில் பல இலட்சம் மாணவர்கள், கல்விக் கற்க முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், ஒரு சிலரின் நன்மைக்காக, இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும் சைட்டத்தை முன்னெடுக்க, அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகின்றது. நெவில் பெர்ணான்டோ தனியார் வைத்தியசாலை, அரசுடமையாக்கப்பட்டதாக, மக்கள் மத்தியில் அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது.
ஆனால், வர்த்தமானியில் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசு, இவ்வாறு மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
எனவே, இவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகளை எதிர்க்க பொதுமக்களும் மாணவரும் ஓரணியில் திரண்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்றனர்.
4 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago