2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் விற்றவருக்கு பொலிஸ் பிணை

எஸ்.சதிஸ்   / 2020 ஜனவரி 12 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌர்ணமி தினத்தன்று, தலவாக்கலையில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், பொலிஸ் பிணையில் விடுத​லை செய்யப்பட்டுள்ளார்.

தவலாக்கலை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையே, குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 49 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு எதிராக, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .