2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

சுத்திகரிப்பு ஊழியர்களுக்கு வாய்ப்புற்றுநோய்

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சப்ரகமுவ மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளின் சுத்திகரிப்பு ஊழியர்களாகக் கடமையாற்றும் ஊழியர்களின் மத்தியில், வாய்ப்புற்று நோய் ஏற்படுவதற்கான  அறிகுறிகள் தென்படுவதாக, சப்ரகமுவ மாகாண சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சிற்றூழியர்களுக்காக நடத்தப்பட்ட வைத்தியப் பரிசோதனையொன்றிலேயே, இது தொடர்பாக தெரியவந்துள்ளது.

“சப்ரகமுவ அழகானது” வேலைத்திட்டத்தின் கீழ், இம்மாகாணத்தின் இரத்தினபுரி, பலாங்கொடை, கேகாலை, எம்பிலிப்பிட்டிய நகரசபைகள் உள்ளிட்ட 25 உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் சிற்றூழியர்களுக்காக, இலவச வைத்தியப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இவற்றில் கடமையாற்றும் 458 ஊழியர்களில் 28 ஊழியர்களுக்கு வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .