2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சுபீட்சம் வேண்டி, விசேட துஆ பிரார்த்தனை

Editorial   / 2019 நவம்பர் 29 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது நபி (ஸல் )  பெயரிலான  29அவது வருட புனித  மீலாத்  கந்தூரி வைபவத்தில் நாட்டின் சுபீட்சம்  வேண்டி, விசேட துஆ பிரார்த்தனைகள் நடை நடைபெற  ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது.

இந்த   புனித மீலாத் கந்தூரி,   எதிர்வரும் சனிக்கிழமை (30) கெலிஓயா, முறுத்தகஹாமுல்ல  மஸ்ஜிதுன் ரஹ்மான் ஜும்மாஆ  பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மஹ்ரிப் தொழுகையையடுத்து, நபிகள் கோமான்  முஹம்மது நபி (ஸல்)  பெயரிலான  புனித மெளலித்  மஜ்லிஸ் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத்தொடர்ந்து,  வெலிகம  ரிபைய்யா  அரபு கல்லூரியின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம் அப்துல்லா (ரவ்லி ) தலைமையில், நாட்டின் சுபிட்சத்துக்கான  விசேட  பயான் மற்றும் துஆ பிராத்தனைகள்  நடைபெறும் என நிர்வாகத் தலைவர்  எம்.ஏ. முஸ்தாக் முஹம்மட் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .