2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சீரற்ற காலநிலையால் பாக்குச் செய்கைப் பாதிப்பு

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட பல பிரதேசங்களில் நீடித்துவரும் சீரற்ற காலநிலை காரணமாக, பாக்குச் செய்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாக்குச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மாகாணத்தில் பாரியளவில் பாக்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகினறது.

சீரற்ற காலநிலையால் பாக்கு மரங்களில் பூக்கள் உதிர்கின்றமை, பாக்கின் அளவு சிறிதாகின்றமை, போதியளவு பாக்கு உற்பத்தி இன்மை காரணமாக, பாக்குச் செய்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக,   செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக மழை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் காரணமாக சந்தையில் பாக்கின் தொகை விலை அதிகரித்துள்ளதாக, செய்கையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .