Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சிவாணி ஸ்ரீ / 2017 மே 29 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சுற்றறிக்கைகளை புறந்தள்ளவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு, அனைவரும் முன்வர வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதனையே வலியுறுத்தியுள்ளார்’ என்று, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரச அதிகாரிகள் உதவிகளை வழங்கும்போது அச்சமடையத் தேவையில்லை. அரச அதிகாரிகள் மற்றும் அரச சேவையாளர்களுக்கு எந்தவிதமான பிரச்சினை, சிக்கல்கள் வந்தாலும், அவர்களைப் பாதுகாப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்” என்றும் அவர் கூறினார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு மேலும் கூறிய அவர்,
“வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பான விடயங்களை, முறையாக அறிந்துகொள்வதற்கும் சரியான தகவல்களை வழங்குவதற்கும் தொடர்புகள் அவசியமாகும். எனவே, தகவல்களை அறிந்துகொள்வதற்கான தொடர்புகளை, சரியான முறையில் அமைத்துக்கொள்வது அவசியமாகும்.
“அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குடிநீர் வழங்கும்போது சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுவிடயத்தில், நீர்வழங்கல் அதிகார சபை கவனம் செலுத்த வேண்டும்.
“மேற்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில், மின்சாரம் மற்றும் பாதிக்கப்பட்ட வீதிகளை உடனடியாகச் சீர்திருத்தி, மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுச் செல்வதற்கு, மின்சாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago