சிவாணி ஸ்ரீ / 2020 மார்ச் 03 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

காவத்தை பிரதேசத்திலுள்ள சிறு தேயிலை பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி, இன்று (03) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காவத்தை பிரதேசத்தை அண்மித்த மாக்கந்துர பனாவல, எல்லேகேவத்த, ஓபாத்த, வெள்ளந்துர, யாயின்ன உள்ளிட்ட பல தோட்டங்களைச் சேர்ந்த பெருந்திரளான சிறு தோட்ட உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
நாட்டில் தற்போது நிலவிவரும் வரட்சியுடனான வானிலை காரணமாக, தேயிலை வருமானம் பூஜ்ஜியத்திலேயே உள்ளது என்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தத்தமது வேலையை இழந்துள்ளனர் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
தங்களுக்கான வருமான குறைந்துள்ளமையாமல், உரத்துக்கென பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த முடியாதுள்ளது என்றும் எனவே, இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

27 minute ago
1 hours ago
5 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
5 hours ago
14 Dec 2025