Kogilavani / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
மஸ்கெலியா நோர்வூட் தோட்டத்திலிருந்து, ஞாயிற்றுக்கிழமை உடலமாக மீட்கப்பட்ட சிறுத்தையானது, விஷம் தடவப்பட்ட ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக, வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேற்படித் தோட்டத்திலிருந்து, நான்கு அடி நீளமும் மூன்று அடி உயரமும் கொண்ட சிறுத்தையின் உடலம், ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சிறுத்தையின் உடலம் மீட்கப்படும்போது, அதனது வாயில் இரத்தம் தோய்ந்திருந்தது.
இந்நிலையில், இதனது உடலத்தை பரிசோதித்த வைத்தியர்கள், சிறுத்தை விஷம் தடவப்பட்ட கூறிய ஆயுதமொன்றில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையை கொன்றவர்களை, கைதுசெய்வதற்கான நடடிக்கையில், நோர்வூட் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago