Kogilavani / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜா, ஆர்.ரமேஸ்
அகரப்பத்தனை, டொரிங்டன் கல் மதுரை தோட்டத்தில் சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான 43 வயது நபர், அகரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (14) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்த்தரான எஸ்.தியாகராஜா என்பவரே பாதிப்படைந்துள்ளார்.
இவர், தனது வளர்ப்பு நாயுடன் வனப்பகுதிக்குச் சென்றபோது, சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இவரது வளர்ப்பு நாயையும், சிறுத்தை தாக்கியுள்ளது.
குறித்த நபர், மயக்கமுற்ற நிலையில் தேயிலைச் செடியின் அடிவாரத்தில் கிடந்ததைக்கண்ட பிரதேச மக்கள், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேற்படி நபர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
9 hours ago
9 hours ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
20 Nov 2025