Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2016 மார்ச் 09 , மு.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
'சிறுவர்கள் தொலைக்காட்சிகளில் கார்ட்டூன் பார்ப்பதும் வீடியோ விளையாட்டில் (ஏநனழை புயஅந) ஈடுபடுவதும் பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனை யாரும் பெரிதாக நினைப்பதில்லை. தொலைக்காட்சிகளில் கார்ட்டூன்கள் சாதாரணமாக ஒளிபரப்பப்படுவதாக நினைக்கின்றோம். ஆனால், பாரிய நோக்கத்தின்; அடிப்படையில், பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து சர்வதேச ரீதியில் கார்ட்;டூன்கள் ஒளிபரப்பப்படுகின்றன' என சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எம்.எல்.எம்.ரயீஸ் தெரிவித்தார்.
மடவளை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், சிறுவர் பராமரிப்பு தொடர்பான செயலமர்வு, கண்டி, மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,'கார்ட்டூன் தொடர்களின் பின்னணி மிகப் பயங்கரமானது. எந்த ஒரு கார்ட்டூனும் தற்செயலாக உருவாக்கப்படுவதில்லை. அவை அனைத்தும், குறிப்பிட்ட ஒரு நோக்கை அடைப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
உதாரணமாக, ஒரு பூனை, எலி பிடிப்பதை மையமாக வைத்துக் கார்ட்டூன் எடுக்கப்படுகின்றது என வைப்போம். இதை பார்க்கும்போது எவ்வித பாதகமும் தெரிவதில்லை. ஆனால், அந்தப் பூனை எலியை பிடித்து, கொன்று சாப்பிடுவதில்லை. எத்தகைய துன்புறுத்தல்களை செய்ய முடியுமோ அவை அனைத்தையும் அந்த எலிக்கு பூனை செய்கின்றது. எலி இறந்தப் பிறகு பூனை மகிழ்கிறது.
'நீங்கள் சிரிக்க வேண்டுமாயின் அல்லது உங்களுக்கு மகிழ்ச்சி தேவையாயின் அதற்காக மற்றவரை நோகடிக்க வேண்டும் என்றத் தகவலை அந்தக் கார்ட்டூன் வழங்குகின்றது. எனவே, போதைக்கு அடிமையாவதுப் போல், சிறுவர்கள் இத்தகைய கார்ட்டூன்களுக்கு அடிமையாகி மற்றவரை துன்புறுத்தி மகிழும் நிலைக்கு மாற்றப்படுகின்றனர்.
பூவைக் கசக்கியப் பின்னர், நுகராமல் வீசி எறிவதில் அக மகிழ்ச்சி காண்கின்றனர். இது அனைத்து இடங்களிலும் நடக்கின்றது. பாலியல் வன்கொடுமைகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும்' என்றார்.
'இலண்டன் போன்ற நாடுகளுடன் எமது நாட்டை ஒப்பிடும்போது, எமது நாட்டில் பெற்றோர், தமது குழந்தைகளை தொடர்புக்கொள்ளும்; அளவு மிகக் குறைவாகவே உள்ளது. பெற்றோர் இயன்றவரை பிள்ளைகளுடன் நெருங்கிப் பழக வேண்டும். அதுவே, பிள்ளைகளை திறமைசாலிகளாக உருவாக்குகின்றது. இதன்போது, அவர்களது பலத்தையும் பலவீனத்தையும் பெற்றோர் சரியாகப் புரிந்துக்கொள்ள முடியும்' என்றார்.
'ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமாயின் அவர்களைக் கொலை செய்துக் குவிக்கத் தேவையில்லை. அவர்களதுக் கல்வியை அழித்தால் போதும். அவர்கள் இயல்பாகவே தம்மைத் தாமே அழித்துக் கொள்வர்' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
4 hours ago