Editorial / 2020 ஜனவரி 05 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன், சிறுத்தையின் உடலமொன்றை, உடவளவ சரணாலத்திலுள்ள நீரோடைன்றுக்குள் இருந்து, விசேட அதிரடிப்படையினர், நேற்று (5) காலை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தையின் உடலத்தில், கால் நகங்கள், பற்கள் என்பவை கழற்றி எடுக்கப்பட்டுள்ளன என்று, விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைய, ஸ்தலத்துக்கு விரைந்த படையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
சிறுத்தையின் உடல் முழுவதும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் சரணாலயத்தின் விலங்குகளைக் கொன்று அவற்றின் உடற்பாகங்களை அபகரித்து வரும் விசமிகளின் நாசகரச் செயலாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் அவதானத்தை செலுத்தவும் தேடுதல்களை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில், விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வனவளத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.
9 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
32 minute ago
35 minute ago