Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளின்போது, தமிழக அரசாங்கம் குரல்கொடுக்கவும் ஆதரவுத் தரவும் முன்வர வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வு, கண்டி பொல்கொல்ல கூட்டுறவுச் சங்க மண்டபத்தில், நேற்று (16) இடம்பெற்றது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் கல்விப் பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், "இலங்கைத் தமிழ் மக்களுக்கு, தமிழ்நாடு ஒரு காவலன்" என்றும் குறிப்பிட்டடார்.
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், உலக ரீதியான ஓர் ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டதோடு, “நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்காக” என்று கூறுவதனாலேயே, தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமரர்களான எம்.ஜி.இராமச்சந்திரன், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் வழியில், தமது அரசியல் பயணமும் தொடரும் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
6 hours ago