2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

தேர்தலைப் புறக்கணிக்கத் தீர்மானம்

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலைப் புறக்கணிப்பதற்கு, தாழ் நிலப்பிரதேச தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர் என்றுத் தெரியவருகிறது.

தமது பிரச்சினைகள் உரியமுறையில் தீர்க்கப்படாது விட்டால், பொதுத் தேர்தலைப் புறக்கணிப்பர் என தாழ்நிலப் பிரதேச தோட்டத் தொழிலாளர்களின் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 1,000 ரூபாய் வழங்கப்படாதுவிட்டால் தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அவர் ​தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிப்பதை புதிய அரசாங்கமும் தவிர்த்து வருவதால் தமது சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதென, சங்கத்தின் செயலாளர் ருவன் கால்லகே தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் தோட்டத் தொழிலாளர்கள் அதிக பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனரென்றும் எனவே, அவர்களது பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவர்களது நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரித்து வழங்குமாறும் அவர் தனது சங்க அறிக்​கையில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .