2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தலவாக்கலையில் இ.தொ.காவின் மகளிர் தினம்

ஆ.ரமேஸ்   / 2020 மார்ச் 03 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மகளிர் தின நிகழ்வையொட்டி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வு, தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.

இம்மாதம் 8ஆம் திகதி காலை, தலவாக்கலை நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் காங்கிரஸ் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரியுமான அனுஷா சிவராஜாவின் வழிகாட்டலின் கீழ் நடைபெறவுள்ளது.

பெருந்தோட்ட சமூகம் உள்ளிட்ட இந்திய வம்சாவளி  சமூகத்தின் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அத்துடன், தலவாக்கலை நகரில் மகளிர் தின பேரணியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .