2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலை-நுவரெலியாவுக்கான பஸ் சேவை புறக்கணிப்பு

Editorial   / 2019 நவம்பர் 25 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், ரஞ்சித் ராஜபக்ஷ

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா  நோக்கி டெஸ்போட் சுற்றுவட்ட வீதியில் பயணிக்கும் தனியார் பஸ்களின் உரிமையாளர்கள், இன்று (25) காலை முதல் மேற்கொண்டு வரும் பணிபுறக்கணிப்பு காரணமாக, பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நானுஓயா- டெஸ்போட் பிரதான வீதியில், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சுற்றுவட்ட வீதியில் வாகன போக்குவரத்தை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணிக்கும் 14 தனியார் பஸ்கள், ரதெல்ல குறுக்கு வீதி வழியாக பயணத்தை மேற்கொள்ள முற்பட்டபோது, அதற்கெதிராக பொலிஸார் தண்டபணம் அறவிடுவதாகவும் அவ்வீதி வழியாக பயணிப்பதற்கு அனுமதி வழங்க மறுப்பதாகவும்,  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பஸ் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

புனரமைப்பு மேற்கொள்ளப்படும் டெஸ்போட் வீதியில், மண்கள் நிறைந்து மழைக் காலத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அடிக்கடி பஸ்கள் பழுதாவதாகவும் இதனால் பஸ்களைத் திருத்துவதற்கு, அதிகளவு பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .