2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

தீ காயங்களுக்கு உள்ளான மூதாட்டி மரணம்

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கடந்த 30 வருடங்களாக மண் குடிசையொன்றில் தன்னந்தனியாக வாழ்ந்து வந்த ரூபசிங்க ஆராச்சிலாகே என்ற 72 வயது மூதாட்டி, தீ காயங்களுக்கு உள்ளான  நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்தச் சம்பவம் கண்டி கட்டுகஸ்தோட்டை முல்லேகம பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி மண்குடிசையில் தீ காயங்களுடன் காணப்பட்ட இவரை, பிரதேசவாசிகள் கிராமசேவகரின் உதவியுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  எனினும், இவர் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

மூதாட்டிக்கு சமூர்த்தி வங்கி உட்பட மூன்று வங்கிகளில் 150,000 ரூபாய் பணம் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவரது உறவினர்கள் என கூறி பலர் இன்று முன்வந்திருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .