Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூலை 20 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
“மலையக மாணவர்களிடையே தற்போது பல்கலைக்கழக கல்வியில் நாட்டம் செலுத்தும் ஆர்வம் அதிகரித்து வருகின்றது. அதனால் அதற்கான வாய்ப்பை மலையக மாணவர்களுக்கு நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்தின் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பொது தராதர உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தொரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மலையகத்துக்கான தனியான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த அரசாங்க காலத்தில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தார். அத்துடன், ஹட்டன் நகரத்தில் இலங்கை திறந்த பல்கலைக்கழக பிராந்திய கற்கை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான காணி ஒன்றையும் பெற்றுக்கொடுத்துள்ளார். அந்தக் காணி திறந்த பல்கலைக்கழகத்துக்கு உடைமையாக்கப்பட்டிருக்கிறது.
பிராந்திய கற்கை நிலையம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டும் இதுவரை கட்டங்களை அமைத்து, கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கவில்லை. எனவே, காலதாமதத்தை ஏற்படுத்தாமல் மலையக மாணவர்களின் நலன் கருதி ஹட்டனில் பிராந்திய கற்கை நிலையத்தை ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.
“ஹட்டன் கல்வி வலயத்தில் தற்போது முப்பதைந்து பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இது எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியை காட்டுவதுடன் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்துக்கு அதிகமானவர்களை அனுப்புவதற்கு வழியேற்படுத்தியுள்ளது.
பாடசாலைகள் தமக்கிருக்கின்ற வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி தத்தமது பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். எல்லா மாணவர்களும் ஒரே இடத்தை நோக்கி கல்விக்காக குவியும் நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மலையகத்தின் எல்லா இடங்களிலும் சிறந்த கல்வியை குறிப்பாக ஹட்டனுக்கு நிகரான அல்லது அதற்கு மேலான கல்வியை வழங்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை மத்திய மாகாணசபை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago