2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள்?

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை, புவக்கொடுமுல்ல, கல்பிட்டிய பகுதியில், தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கூறினார்.    

மேற்படி பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40க்கு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, 14 வீடுகள் அடங்கிய லயன் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து சாம்பராகியது. இதனால், இக்குடியிருப்புகளில் வசித்து வந்த 59பேர், நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதிக்கு புதன்கிழமை (13) விஜயம் மேற்கொண்ட மாகாண அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அம்மக்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க, தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்போவதாக உறுதியளித்தார்.

இவ்வீடுகளை அமைப்பதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டதன் பின்னர், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .