Kogilavani / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.எம். ரம்ஸீன்
கம்பளை, அம்புலுவாவப் பகுதியில் குப்பை மேடு சரிந்தமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இதுவரை நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கம்பளை நகரிலும் நகரை அண்டியப் பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக, அம்புலுவாவ மலைப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தன.
கடந்த மே மாதம், மலையகத்தில் பெய்த அடைமழை காரணமாக, அம்புவலுவாவ குப்பை மேடு சரிந்து விழுந்ததினால், குப்பை மேட்டுக்கு அருகிலிருந்த வீடுகள் சேதமடைந்தன. இதன்காரணமாக, இவ்வீடுகளில் வசித்து வந்த 25 குடும்பங்கள் வெளியேறி, அம்புலுவாவ விகாரையில் ஒரு மாதகாலமாகத் தங்கியிருந்தனர்.
இக்குப்பை மேடு சரிந்து விழுந்தமையால் மக்களின் பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்பட்டன.
இதன் பின்னர், வீடுகளுக்குத் திரும்பிய மக்கள், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வீடுகளைத் திருத்தி குடியமர்ந்துள்ளனர். எனினும், இம்மக்களுக்கு இதுவரை எதுவித நட்டஈடுகளும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இக்குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை மதிப்பீடு செய்து, நட்டஈடு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரச அதிகாரிகள் தெரிவித்திருந்தப் போதிலும், இதுவரை அதிகாரிகள் மௌனம் சாதித்து வருவதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025