Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
நோர்வூட் பிரதேசசபைக்கு உட்பட்ட 12 வட்டாரங்களிலும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் 40.7 மில்லயன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளார் என்று, நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கணபதி குழந்தைவேல் ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விளக்கம் தருகையில், நோர்வூட் பிரதேச சபை நிர்வாகத்தில், 12 வட்டாரங்கள் உள்ளன என்றும் அவற்றில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக, தலா 30 இலட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, மூன்று கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட வனராஜா வட்டாரத்துக்கு, 50 இலட்சம் ரூபாயும் இரண்டு கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட பொகவந்தலாவ வட்டாரத்துக்கு, 40 இலட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேற்படி நிதிகளைக் கொண்டு கொங்ரீட் பாதைகள், படிக்கட்டுகள், குடிநீர் முதலான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அத்தோடு, நகரங்களை அண்மித்துள்ள கிராமங்களுக்குச் செல்லும் 14 பாதைகளைப் புனரமைப்புச் செய்வதற்காக, தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் 70 இலட்ச ரூபாயை மேலதிகமாக அமைச்சர் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
அதற்கமைய பொகவந்தலாவ நகரத்தை அண்மித்துள்ள ஸ்ரீபுரம், ஆரியபுரம், பாரதிபுரம் ஆகியவற்றில், ஏழு பாதைகளும் நோர்வூட் நகரை அண்மித்துள்ள நிவ்வெளி, நோர்வூட், கொலனி ஆகிய 3 பாதைகளும், ஹட்டன் காமினிபுர, எரோல், பொன்னகர், குடாகம ஆகிய 4 பாதைகளும் புனரமைக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு, இம்மாதம் 19ஆம் திகதி வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவற்றுக்கும் மேலதிகமாக நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டங்களில், 1,200 வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதேச சபையின்
15 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago