2025 ஜூலை 12, சனிக்கிழமை

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 மே 25 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

தமக்கு வழங்க வேண்டிய நிலுவைப் பணத்தை உடனடியாக வழங்கக் கோரி, கட்டட நிர்மாண ஒப்பந்தக்காரர்களும், நிர்மாண தொழிலாளர்களும் இன்று(25) நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.  

ஒப்பந்த அடிப்படையில், நுவரெலியா மாவட்ட செயலக கட்டடம் மற்றும் மாவட்ட செயலாளரின் உத்தியோகபூர்வ இல்லம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விரு கட்டடங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளப் போதிலும் தமக்கு வழஙக வேண்டிய 30 இலட்சம் ரூபாய்; இதுவரை வழங்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கூறினர்.

மாவட்ட செயலாளர் மேற்படி பணத்தை வழங்க தாமதப்படுத்துவதால்,  வங்கிகளுக்கும் கட்டட நிர்மாண வேலைகளுக்கு பொருட்கள்கொள்வனவு செய்த வர்த்தக நிலையங்களுக்கும் கடனாளியாகியுள்ளதாக அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இவ்விடயம் தொடர்பில் மாட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்லவிடம் கேட்டபோது தான் சுகவீனம் காரணமாக கொழும்பில்  சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆர்பாட்டம் தொடர்பில் எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .