2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

’போக்குவரத்து பணிப்பு பெண் பொலிஸார் அமர்த்தப்படுவர்’

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

போக்குவரத்து பொலிஸாரின் பணிகளுக்காக, பெண் பொலிஸ் அதிகாரிகளை பணியில் அமர்த்தவுள்ளதாக, இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்ஹ, நேற்று (06), தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள், சிறுவர் மற்றும் மகளிர் நன்னடைத்தைப் பிரிவு அதிகாரிகளை அறிவுறுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆண் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதாக குற்றஞ்சாட்டப்படுவதாகவும் அவ்வாறான தவறுகளில் பொலிஸார் ஈடுபட்டால், அது தொடர்பான தகவல்களை தனக்குத் தருமாறு, அவர் இதன்போது ​பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் இடம்பெறும் இரண்டாவது மாவட்டமாக, இரத்தினபுரி மாவட்டம் காணப்படுவதாகவும் அனுராதபுர மாவட்டம் முதலிடத்திலும் மூன்றாவது இடத்தில் மொனராகலை மாவட்டமும் விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.

இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் இதற்கு, கடுயைமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .