மொஹொமட் ஆஸிக் / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூஜாபிட்டிய பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்ஹின்ன பிரதேசத்தில், புதிதாக மாட்டிறைச்சிக் கடை ஒன்றுக்காக அனுமதி வழங்க வேண்டும் என்று, பூஜாபிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் உவைஸ் ரஸானால், இன்று (14) முன்வைத்த பிரேரணை, நிராகரிக்கப்பட்டது.
சபை உறுப்பினர்களின் எதிர்ப்பால், இந்தப் பிரேரணை நிராகரிக்கப்பட்டிருந்தது.
பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அநுர பெர்ணான்டோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குறித்த பிரதேசத்தில் இரண்டு மாட்டிறைச்சிக் கடைகள் இருந்த போதிலும் அவை போதுமானதாக இல்லை என்றும் எனவே, இன்னொரு மாட்டிறைச்சிக் கடையின் தேவை உள்ளது என்றும் அதற்கான அனுமதி வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் தற்போதுள்ள சூழலில், ஏற்கெனவே இருக்கும் மாட்டிறைச்சிக் கடைகளையும் மூடிவிடுவதற்கு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் எனவே புதிய மாட்டிறைச்சிக் கடையைத் திறப்பதற்கு ஆலோசனை கொண்டு வருவது பொருத்தமற்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எம்.பீ.ரம்சான் மொஹமட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இந்தப் பிரேரணை தற்போதுள்ள நிலையில் பொருத்தமற்றது என்பதால், சபை உறுப்பினர்களால் பிரேரணை நிராகரிக்கப்பட்டது.
40 minute ago
52 minute ago
59 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
59 minute ago
5 hours ago