Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
மொஹொமட் ஆஸிக் / 2017 மே 29 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அரசாங்கம் தன்னால் இயன்றளவு வழங்கும்” என, உயர்க் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டி, புனித அந்தோனியார் கல்லூரி வருடாந்தக் கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வு, சனிக்கிழமை (27) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
“அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கின்றது. அதேநேரம், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்துச் சலுகைகளையும் வழங்க, அரசாங்கம் தயாராக உள்ளது.
“அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவிகளையும் நட்டயீடுகளையும் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
“இதேவேளை, வெளிநாடுகளின் உதவிகளையும் நாம் கோரியுள்ளோம். நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, இந்தியாவில் இருந்து தற்போது இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதேநேரம், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக, இலங்கை விமானப்படையுடன் இணைந்துச் செயற்படுமாறு, ஹெலிகொப்டர்கள் வைத்திருக்கும் தனியார்களையும் நான் பணித்துள்ளேன்.
“பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான படகுச் சேவையும் போதுமானதாக இல்லை. தனியார் துறையினரிடம் படகுச் சேவையின் உதவியையும் நாடியுள்ளோம். மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியப் பின்னர், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago