2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

புதிய இடத்துக்கு இடமாறும் கலவான வைத்தியசாலை

சிவாணி ஸ்ரீ   / 2017 ஜூன் 06 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ள இரத்தினபுரி, கலவான ஆதார வைத்தியசாலை, சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில், பாதுகாப்பான இடமொன்றில் 6,000 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கலவான பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனை கருத்திற்கொண்டு, மேற்படி வைத்தியசாலையை பாதுகாப்பான இடத்தில் புதிதாக அமைப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் மாகாண சுகாதார அமைச்சருமான மஹிபால ஹேரத் தலைமையிலான குழுவினர், கலவான பிரதேசத்துக்கு விஜயம் செய்து மேற்படி வைத்தியசாலையை மாற்று இடத்தில் அமைப்பதற்கு தொடர்பில் ஆராய்ந்தனர்.

இதன்போது மாற்று இடத்தில் அமைக்கப்பட உள்ள கலவான ஆதார வைத்தியசலையின் வரைபடத்தையும் சப்ரகமுவ மாகாண பொறியியற் சேவை அதிகாரிகள், மாகாண முதலமைச்சரிடம் கையளித்தனர்.

இதன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .