2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பொது இடங்களில் தபால் பெட்டிகளை வைக்க நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டங்களில் தபால்களை விநியோகிப்பதில் ஏற்பட்ட சிக்கல்நிலைகளைக் குறைத்துக்கொள்வதற்காக, பொது இடங்களில் தபால்பெட்டிகளை வைப்பதற்கான ஆலோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் துறைக்கான தபால் சேவையை வினைத்திறனாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால்திணைக்களம் அறிவித்துள்ளது.

தொகுதி முறையிலான தபால் பெட்டிகளை பெருந்தோட்டக் குடியிருப்புகளில் பயன்படுத்தவுள்ளதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம், நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டங்களுக்கு, தபாலை விநியோகிகப்பதிலுள்ள சிக்கல் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தபால் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாகவே பெருந்தோட்டங்களுக்கான சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்காரணமாக, பொதுஇடத்தில் தபால் பெட்டியை நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அதன்மூலம் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .