2025 ஜூலை 19, சனிக்கிழமை

’போலி அறிக்கையிடும் நேரம் இதுவல்ல’

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, பசறை வைத்தியசாலையில் நேற்று (07) நிலவிய பதற்றமான சூழ்நிலை தொடர்பாக, தொலைக்கட்சிகளிலும் பத்திரிகைகளிலும் உண்மைக்குப் புறம்பான அறிக்கைகள் வெளியாகி வருவதாகவும் இவை அனைத்தும், தனது நற்பெயருக்குக் களங்கள் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளமையால், அவற்றை வன்மையமாகக் கண்டிப்பதாகவும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் நிகழ்ந்த உண்மையான விடயங்கள் எதுவும் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என்றும் ஊடகங்கள் எப்போதும் நடுநிலை தவறாமல் செயற்படவேண்டிய நிலையில்,  இவ்வாறு இனவாதமாக செயற்படுவதை கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தனக்கு எதிரான போலியான தகவல்களைப் பரப்புவதற்கு, இனவாதிகள் முயல்கின்றனர் என்றும் ஆனால், இவ்வாறான கேவலமிக்க செயல்களை செய்வதற்கான நேரம் இதுவல்ல என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X