Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையானது பால் உற்பத்தியில் தன்னிறைவடைய வேண்டுமாயின் தோட்டப் பகுதிகளை மையப்படுத்தியே பால் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், அதை உபதொழிலாக செய்வதற்குரிய அடிப்படை வசதிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.
வெளிநாட்டிலிருந்து பசுக்கள் இறக்குமதி செய்யப்படுவதை மையப்படுத்தி, மக்கள் முன்னணியால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.
இங்குத் தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர்,
குறிப்பாக திரவப்பாலையும், பால்சார்ந்த பொருட்களையும் உள்நாட்டிலேயே உற்பத்திசெய்வதற்குரிய வளங்கள் இருக்கின்றபோதிலும் அவை குறித்து சாதகமாக பரிசீலிக்காது, இறக்குமதிக்காக பல இலட்சங்களை செலவிடுவது வேதனைக்குரிய விடயமாகும் எனக் குறிப்பிட்டார்.
இலங்கையிலேயே அதிகளவு பால் உற்பத்திசெய்யப்படுகின்ற மத்திய மாகாணத்தில்தான் கண்டி மாவட்டமும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், இம்மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் பயிரிடப்படாத நிலங்களாகக் காடாகவே காட்சியளிக்கின்றன எனச் சுட்டிக்காட்டினார்.
“அரசுக்கு சொந்தமான தோட்டங்களே இவ்வாறு எதற்குமே பயன்படுத்தப்படாமல் சூனியவலயமாக்கப்பட்டுள்ளது. தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள் கால்நடை வளர்ப்பில் தேர்ச்சிப்பெற்றவர்கள். எவ்வாறு பசுக்களை வளர்க்கவேண்டும், பால் உற்பத்தியை எப்படி மேம்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு கைவந்தக்கலை. எனினும், பொருளாதார நெருக்கடியால் அதையோர் உபதொழிலாக செய்யமுடியாத நிலையில் அவர்கள் இருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
ஆகவே, பால் பண்ணையை ஆரம்பிப்பதற்கும், பசுக்களை பெற்றுக்கொடுப்பதற்கும் கூட்ட முறைமையொன்றை உருவாக்கி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தால் உள்நாட்டிலேயே பால் உற்பத்தியில் எம்மால் தன்னிறைவடையக்கூடியதாக இருக்கும் என்பதுடன் அந்நிய செலாவணி வெளியேறுவதையும் தடுக்கமுடியும். அதுமட்டுமல்ல பெருந்தோட்டத்துறையையும் பாதுகாக்கக்கூடிய சூழல் உருவாகும்.
இதற்குரிய சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்கமாறு பலதடவைகள் நாம் கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், சம்பந்தப்பட்ட சபைகளின் தலைவர்கள் அவற்றுக்கு செவிமடுப்பதாக தெரியவில்லை. உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்பை வழங்குவதைவிட, வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு காணிகளை தாரைவார்ப்பதிலேயே அதிக ஆர்வம்காட்டுகின்றனர். கண் எதிரே சந்தர்ப்பம் இருக்கின்றபோதிலும், எட்டா தூரத்திலுள்ள முதலாளிமாருக்கு விசுவாசகம்காட்ட முற்படுவதன் நோக்கம் என்ன?
அதேவேளை, கண்டி – மாபேரிதன்ன பால்பண்ணை தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டில் நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், உரிய ஆவணங்கள் கையளிக்கப்படவில்லை. இதனால், காணி மீள சுவீகரிக்கப்பட்டது. தற்போதைய அரசு அம்மக்களுக்கு காணி வழங்கு அமைச்சரவை ஊடாக அங்கீகாரம் அளித்துள்ளது. எனவே, அம்மக்களுக்கு நிலவுரிமை கிடைக்கவேண்டும். அந்த தோட்டத்திலுள்ள மக்களுக்கும் பால் பண்ணைகளை திறப்பதற்கு உதவிகளை வழங்கவேண்டும்”’ என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago