2021 மே 08, சனிக்கிழமை

பொகவந்தலாவையில் 6 கடைகளில் கொள்ளை

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதிஸ்

பொகவந்தலாவை- டியன்சின் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில், 6 கடைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடைகள் உடைக்கப்படுவதை அறிந்த கடையொன்றின் உரிமையாளர் கூக்குரலிட்டதை தொடர்ந்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நகைக் கடைகள் இரண்டு, புடைவைக் கடை ஒன்று, பலசரக்கு கடைகள் மூன்று என்பனவே இதன்போது உடைக்கப்பட்டுள்ளன.

பலசரக்கு கடையில் 86,000 ரூபாய் பணமும் நகை கடையொன்றில் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ளி நகைகளும் திருடப்பட்டுள்ளதாக மேற்படி இரு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் சீசிடிவி கமராவின் உதவியுடன் கொள்ளையர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X