2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

போக்குவரத்து திட்டத்தில் புதிய புரட்சி ஆரம்பம்

Niroshini   / 2016 ஜூலை 17 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

இலங்கையின் தனியார் போக்குவரத்துத் துறையின் ஒரு புரட்சியாக, பஸ்கள் பயணிக்கும் கிலோமீற்றர் தூரத்தின் அடிப்படையில், அரசாங்கத்தினால் பணம் பெற்றுக்கொடுக்கும் திட்டம், மத்திய மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, மின்சார மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சரும் பதில் முதலமைச்சருமான எதிரிவீர வீரவர்தன தெரிவித்தார்.

இந்தப் புதிய திட்டத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கண்டி - பல்லேகலையில் வைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த எதிரிவீர வீரவர்தன, 'இந்தத்  திட்டத்தின் முதற்கட்டத்தில், கண்டி - திகன வீதியில் பயணிக்கும் பஸ்கள் மற்றும் கண்டி - கடுகண்ணாவ வீதியில் பயணிக்கும் பஸ்கள் உள்ளிட்ட 350 பஸ்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.

'இதேவேளை, பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்காக, ரீலோட் செய்யக்கூடிய கார்ட் முறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணையும் அனைத்து பஸ்களுக்கும், ஜீ.பீ.எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து பஸ் வண்டிகளிலும், சீ.சீ.டி.வி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன' என்றும் அவர் கூறினார்.

அத்துடன், 'இந்த புதிய வேலைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள பஸ்கள், தங்களது வழித்தடத்தில் பயணிகள் இல்லாதிருப்பினும், குறித்த நேரத்தில் அவ்வழித்தடத்தில் பயணித்தே ஆகவேண்டும். அவ்வாறு பயணித்த கிலோமீற்றர்களுக்கு, அன்றைய தினம் இரவு 8 மணிக்குப் பின், வங்கி மூலமாக பணம் செலுத்தப்படும்' என்றார்.

இச்சேவையை கண்காணிப்பதற்கென, 200 ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.   ஜனாதிபதியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்படும் இந்த பஸ் சேவை, நாளை  20ஆம் திகதி முதல், அமுல்படுத்தப்படும்' என எதிரிவீர வீரவர்தன மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .