2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பாடசாலையின் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம் மூன்று லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்துக்கான ஐந்து வகுப்பறைகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, பாடசாலையின் அதிபர் என்.இராஜேஸ்வரி தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது.

குறித்த பாடசாலை, கடந்த காலங்களில் எவ்வித அபிவிருத்தியும் இல்லாமல் மாணவர்கள் கற்பதற்கான பௌதீக வளங்கள் அற்ற நிலையில் இயங்கி வந்துள்ளது.

இப்பிரச்சினையை, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மத்திய மாகாண அமைச்சர் ரமேஷ்வரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, இந்த பாடசாலைக்கான புதிய கட்டடத்தை 52 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிப்பதற்காக, மத்திய மாகாண விவசாயம், தோட்ட உட்கட்டமைப்பு மீன்பிடி, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரனினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல், கணபதி கனகராஜ், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X