2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் தங்கச்சங்கிலி அபகரிப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஷ்

ஹட்டன் தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் பணிப்புரியும் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொகவந்தலாவை, மோரா மேற்பிரிவுத் தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி பெண், வழமைபோன்று நேற்று (27) காலை வேலைக்குச் சென்றபோதே, இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

எதிரே வந்த இனந்தெரியாத நபரொருவர், தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு ஓடிவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்காண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--