2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பொது சேவைகள் இன்மையால் பயணிகள் அசௌகரியம்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜிதா

நாவலப்பிட்டி - திஸ்பனை வீதியில், பொது போக்குவரத்து சேவை முறையாக இடம்பெறாமையால் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொழிலுக்காக தினமும் காலை வேளையில் கெட்டப்புலாவிலிருந்து திஸ்பனை நோக்கி செல்லும் தொழிலாளர்கள், உரிய நேரத்துக்கு தொழிலுக்கு செல்ல முடியாதுள்ளதாகவும், தாம் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  கவலை தெரிவிக்கின்றனர்;.

இப்போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் நாவலப்பிட்டிய பஸ் டிப்போவை சேர்ந்த அதிகாரி ஒருவரிடம்  வினவிய போது, நாவலப்பிட்டியிலிருந்து திஸ்பனைக்கு சேவையில் ஈடுபட்ட பஸ்  பழுதடைந்துள்ளதால், அதை திருத்தி அமைத்து விரைவில் சேவையில்  ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .