2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

புனரமைக்கப்பட்ட பாதை மக்கள் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 09 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

ஹட்டன், ஆரியகமப் பகுதியின் ஒரு பகுதிப் பாதை செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான

ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இப்பாதைத் திறப்பு விழா இடம்பெற்றது.

8 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பாதை கொங்கிறீட் பாதையாக இப்பாதை புனரமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, முன்னாள்; அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .