2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பூப்புனித நீராட்டு விழாவில் மோதல்:அறுவர் கைது

Sudharshini   / 2016 மே 30 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

கொஸ்லந்தை, கொவிபனாவெல பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற  பூப்புனித நீராட்டு விழாவின்போது, இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் மோதலுடன் தொடர்புடைய அறுவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இம்மோதலின்போது காணாமல்போனதாகக் கூறப்படும் இரு முச்சக்கர வண்டிகள், இரு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில், இருவர் காயமடைந்ததுடன், வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இம்மோதலின்போது மேலுமிரு முச்சக்கர வண்டிகளும் இரண்டு மோட்டார் சைக்கில்களும் காணாமல்போயுள்ளன.

இச்சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் வனப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி வாகனங்களையும் மீட்டுள்ளனர். அத்துடன், மோதலில் ஈடுபட்டு தப்பிச் சென்ற அறுவரையும்; கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .