Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 23, சனிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 11 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
ஜனாதிபதித் தேர்தலில், இரு பிரதான கட்சிகளும் மக்களிடையே பயத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி, வெற்றிபெற முயற்சிப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டீ.லால்காந்த தெரிவித்தார்.
கண்டி டெவோன் ரெஸ்ட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், “மக்களை அச்சுறுத்துவதும் அவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துவதும் பயங்கரவாதமாகும். இங்கு குண்டு ஒன்று இல்லாமல் இருக்கலாம். அதற்கு பேனாவை, கமெராவை அல்லது குரலைப் பயன்படுத்தி இருக்கலாம். இதுவும் ஒருவகை பயங்கரவாதமாகும்” என்று விமர்சித்தார்.
“நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று, மக்களை இரு தரப்பினரும் அச்சுறுத்துகின்றனர். நாங்கள் அறிந்த வகையில், நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புத் தொடர்பில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கின்றன. சிங்கள, முஸ்லிம் அடிப்படைவாதிகளால், மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதனால்தான் பாடசாலைகளுக்கு அருகில், பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
“முன்னால் பாதுகாப்புச் செயலாளர் ஒருவரும் போட்டியிடுவதால், தேசிய பாதுகாப்பு தொடர்பாக அதிகம் பேசப்படுகின்றது. வாக்குகளைப் பெற்றுக்கொள்தவற்காக மக்களை அச்சுறுத்துவது பயங்கரவாதமாகும். சஜித் பிரேமதாஸ அவர்களதுத் தரப்பினர் கோட்டாபய ராஜபக்ஷவை காரணம் காட்டி அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். இருசாராரும் மக்களை அச்சமூட்டுகின்றனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2021
22 Jan 2021
22 Jan 2021