2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மடுல்சீமை விபத்து: பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுக்கு நடவடிக்கை

எம். செல்வராஜா   / 2020 மார்ச் 02 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை - மடுல்சீமை வீதியில், ஜனவரி மாதம் 6ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கும் காயமடைந்த 42 பேரக்கும் உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சட்டதரணிகள் ஊடாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸுக்கு எதிராக, 40 வழக்குகளைத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அ.அரவிந்தகுமார்,

மலையகத்தில் இவ்வாறு இடம்பெறும் விபத்துகளின் போது, இலங்கை போக்குவரத்துச் சபையால், இறந்தவர்களுக்கான சவப்பெட்டி, சிறுத் தொகை பணம் வழங்கப்பட்டு, முழு பிரச்சினையும் மூடி மறைக்கப்பட்டு விடுவதாகவும் ஒழுங்கான முறையில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்றும் ​அவர் கூறினார்.

எனினும், இ.போ.சாவால் மக்களை இனி ஏமாற்ற முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க, தான் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X