2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மண்சரிவால் மூவர் பாதிப்பு

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பசறை - நிகெபெத்த பகுதி, ஆகரதென்ன கீழ்ப்பிரிவுள்ள வீடொன்றின் மீது, நேற்று முன்தினம்(25) இரவு, மண்மேடு சரிந்து விழுந்ததில், மூன்று சிறுவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வீட்டில், அறுவர் இருந்துள்ளர் என்றும் அவர்களில் மூவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் மேற்படிப் பகுதியில், மண்சரிவு அபாயம் தொடர்வதால்  ஆறு வீடுகளில் வசித்து வந்த 28 பேர் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாதுகாப்பான இடமொன்றில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை, பிரதேச செயலகத்தினூடாக வழங்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .