2021 ஜனவரி 20, புதன்கிழமை

மண்மேடு சரிந்து விழுந்தமையால் 28 பேர் பாதிப்பு மூவருக்குக் காயம்

எம். செல்வராஜா   / 2019 நவம்பர் 26 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை - ஆகரதென்ன எனும் இடத்திலுள்ள வீடொன்றின் மீது, மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், 3 பேர் காயமடைந்த நிலையில், பசறை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட வீட்டுத் தொகுதியிலுள்ள 07 வீடுகளில் இருந்த 28 பேரும், ஆகரதென்ன சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரணங்களையும் உலர் உணவுப் பொருட்களையும், பிரதேச செயலகத்தின் மூலம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையை அடுத்து, மேற்படி மண்மேடு சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவுகள் இடம்பெறலாம் எனவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், பதுளை இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .