Kogilavani / 2016 மார்ச் 27 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
ஹப்புத்தளை, கொஸ்லாந்தை நகரிலுள்ள மதுபானசாலையில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை(26) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஹல்துமுல்லை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சிறிகொத்துலாகே அமரசேன(வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் கொஸ்லாந்தை, கெலபாவெலவைச் சேர்ந்த 45 வயது நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவரை, வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்ல முற்பட்டப்போதிலும் அவர் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இருவரது முரண்பாடை தடுக்கச் சென்ற நபர், காயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 minute ago
16 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
41 minute ago