2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

’மலையகத்தில் ஈரோஸ் போட்டியிடாது’

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்     

 

எதிர்வரும் பொதுத்தேர்தலில், ஈரோஸ் அமைப்பு மலையகத்திலுள்ள மாவட்டங்களில் போட்டியிடாது என்று அவ்வமைப்பின் மலையகப் பிராந்திய இணைப்பாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

ஈரோஸ் அமைப்பு, 40 வருடங்களாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களின் நலன்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் விரைவில் தேர்தலொன்று நடைபெறவுள்ளதால், மக்கள் பக்கம் நின்று முடிவெடுக்க வேண்டியத் தேவைப்பாடு உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதன்படி பொதுத்தேர்தலில் போட்டியிடுவதுத் தொடர்பில் களநிலவரத்தை ஆராய்ந்து, முடிவெடுக்கும் அதிகாரத்தை, ஈரோஸ் அமைப்பின் மத்தியக் குழு மலையகப் பிராந்தியக் குழுவுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்தவகையில், ஒரு மாதகாலமாக மலையகத்திலுள்ள மாவட்டங்களின் நிலவரத்தை ஆராய்ந்ததாகவும்  தமிழ் வாக்குகளைச் சிதறடித்து, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக, பல குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்ததாகவும் தெரிவித்தார்.

எனவே, மலையக மக்களின் வாக்குகளைச் சிதறடித்து, இருக்கின்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யக்கூடாது என்ற முடிவை, மலையகப் பிராந்தியக்குழு எடுத்தது என்றும் இதன்படி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

40 ஆண்டுகளாக நேர்மையாக செற்படும் ஈரோஸ் அமைப்புக்கு, மக்கள் மத்தியில் நன்மதிப்பு உள்ளதெனவும் எனவே, இதனை மூலதனமாகப் பயன்படுத்தி, ஈரோஸ் என்ற போர்வையில் களமிறங்க சிலர் திட்டமிட்டுள்ளனர் என்று தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்தகையவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், அவர்களுக்கும் ஈரோஸின் மலையகப் பிராந்தியத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுவதுத் தொடர்பில் அந்தந்த பிராந்தியங்களின் சூழ்நிலைகளுக்கேற்ப அங்குள்ள தமது குழுக்கள் முடிவுகளை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .