2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மலையகத்தில் மாபெரும் கையெழுத்து வேட்டை

Sudharshini   / 2016 மார்ச் 12 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்த கோரியும் கூட்டு ஒப்பந்தத்தை இம்மாத இறுதிக்குள் கைச்சாத்திட கோரியும்  நாளை (13) காலை 10 மணிக்கு மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் ஒரே நேரத்தில் கையெழுத்து வேட்டையொன்றை, மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒரே நேரத்தில் இராகலை, இரத்தினபுரி, மாத்தரை, தெனியாய, கேகாலை, பலாங்கொடை, புலத்ஹோப்பிட்டிய, ஹட்டன், தலவாக்கலை, போன்ற பிரதான நகரங்களில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென ம.வி.முவின் தொழிற்சங்க பிரிவு பொருளாளர் கிருஸ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் இழுபறியில் இருக்கும் கூட்டு ஒப்பந்தம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியே, மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மக்கள் மகஜர் ஒன்றை தயாரித்து சேகரிக்கப்படும் கையெழுத்துக்களையும் இணைத்து, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தொழிற்துறை அமைச்சர், பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .